மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு வானமாமலை நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை நீர் வீட்டுக்குள் புகுந்தால் நோய்த்தொற்று ஏற்படும் அச்சத்தில் பொதுமக்கள். மதுரை
பைபாஸ் சாலையில் உள்ள துரைசாமி நகர் வானமாமலை நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு நீரானது வீட்டினுள்ளே வருவதால் பொதுமக்கள் நோய்த்தொற்று ஏற்படும் என அச்சத்தில் உள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.