18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கச்சத்தீவு அருகே கடல் கொந்தளிப்பு. மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

கச்சத்தீவு அருகே கடல் கொந்தளிப்பு. மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

எழுதியவர்: mohan November 26, 2019, 10:41 am

இராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 125 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று (25.11.19) காலை மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்குச் சென்றனர். ராமேஸ்வரம் கிழக்காடு மரிய சிங்கராயர் மகன் அலெக்ஸ் விசைப்படகு கரையில் இருந்து 10 நாட்டிக்கல் கச்சதீவு அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். இரவு 8 மணியளவில் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு மூழ்கியது. அதிலிருந்த கிழக்காடு அலெக்ஸ் 35, மணியன் மகன் குமார் 35, ஓலைக்குடா கிரேஸியன் மகன் ஜான் கோபி 34, முத்து மகன் நாகூரான் 45 ஆகியோர் நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை அதே பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த கென்னடி என்பவரது விசைப்படகு (IND TN 10 MM 503) மீனவர்கள் பத்திரமாக மீட்டு நள்ளிரவில் கரை திரும்பினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!