18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு பஸ்நிலையம், கடைவீதி பகுதியில் திறந்தவெளி பலகாரகடைகளால் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம்

பாலக்கோடு பஸ்நிலையம், கடைவீதி பகுதியில் திறந்தவெளி பலகாரகடைகளால் பொதுமக்களுக்கு நோய் தாக்கும் அபாயம்

எழுதியவர்: mohan November 26, 2019, 10:11 am

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டு பஸ்நிலையம், கடைவீதி பகுதியில் திறந்தவெளி பலகாரகடைகளால் பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள் மற்றும் நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு பேருந்து நிலையத்திற்கு , கடைவீதி பகுதிக்கும் தினதோரும் ஆயிரக்கனக்கான பொதுமக்கள் வந்து செல்லுகின்றனர். பேருந்து நிலையத்தில் உள்ள திறந்தவெளி பலகாரகடைகளில் தரமற்ற எண்ணைகள், பழையபயன்படுத்திய எண்ணைகள் மற்றும் நச்சுகலந்த கலர்பொடிகள், சுகாதரமற்ற முறையில் சமைத்து விற்பனை செய்தல், திண்பண்டங்களை எந்த ஒரு பாதுகாப்புயின்றி வெட்ட வெளியில் கொட்டி விற்பனை செய்வதால் பேருந்து நிலையத்தில் அசுத்த காற்று, ஈ, கொசு போன்றவை பலகாரத்தின் மீது பட்டு பலநோய்கள் வர வாய்ப்பு உள்ளது.மேலும் பலகாரங்களை விற்பனை செய்யும் போது செய்தித்தாள், பிளஷ்டிக் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதை பேருந்து நிலையத்தில் உள்ளவர்கள் கடைபிடிப்பதில்லை எனவும் அதிகாரிகளின் அலச்சியத்தால் பல உயிர்கள் பறிபோகும் சூழல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதியில் பலகாரம் விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சரியான முறையில் பொதுமக்களுக்கு பலகாரங்களை விற்பனை செய்ய வேண்டும் என  மாவட்டஉணவு பாதுகாப்பு அதிகரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!