திருச்சி தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவில் மாணவர்களுக்களுக்கான தடகளப் போட்டிகள் நவ. 21, 22, 23 தேதிகளில்நடைபெற்றன. இதில் ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவர் எம்.குமரகுரு உள்பட தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 64 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர் 44.99 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து மாநில அளவில் 6 ஆம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.மாணவர் குமரகுரு, பள்ளி உடற்கல்வி விளையாட்டு ஆசிரியர் ஜெரோம் வில்லியம் ஜெயக்குமார் ஆகியோரை முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி(மண்டபம்), மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி,வேர்க்கோடு புனித ஜோசப் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி தாளாளர் தேவசகாயம், முதல்வர் சூசை ரத்தினம், உடற்கல்வி இயக்குநர்கள் சசிகுமார், அன்சாரி உடற்கல்வி ஆசிரியர்கள் எம்.ரமேஷ், ராஜா, சந்திரசேகர், மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி. ராமேஸ்வரம் பள்ளி மாணவர் 6 ஆம் இடம்
எழுதியவர்: mohan November 25, 2019, 11:34 am




You must be logged in to post a comment.