17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக பரவ விட்டவர் கைது

இராமநாதபுரம் அருகே பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் தவறாக பரவ விட்டவர் கைது

எழுதியவர்: mohan November 25, 2019, 11:27 am

இராமநாதபுரம் அருகே பாண்டியூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,42. இவர், ராமநாதபுரம் காட்டூரணி வைகை நகரில் தற்போது வசிக்கிறார். இவர் பாண்டியூரைச் சேர்ந்த பெண்ணின் போட்டோவை திருடினார். தனக்கும், அப்பெண்ணின் குடும்பத்திற்கும் இடையேயான முன் விரோதம் காரணமாகஅந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பரப்பியதாக அப்பெண் போலீசில் புகார் அளித்தார். நயினார் கோவில் போலீசார் விசாரணையில், சமூக வலைதளங்களில் பெண்ணின் புகைப்படத்தை பரப்பியது உண்மை என தெரிந்தது. இதனையடுத்து பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிந்து ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!