18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 2022-23 ஆம் ஆண்டு மாவட்ட கவர்னர் தேர்வு இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் பாராட்டு விழா

2022-23 ஆம் ஆண்டு மாவட்ட கவர்னர் தேர்வு இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் பாராட்டு விழா

எழுதியவர்: mohan November 25, 2019, 9:59 am

தென் மாநில ரோட்டரி சங்கங்களின் 2022-23 ஆண்டு மாவட்ட கவர்னராக தேர்வாகியுள்ள இதயம் வி.ஆர்.முத்துவுக்கு இராமநாதபுரம் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் பாராட்டு விழா என்எஸ்பி மஹாலில் நடந்தது. தலைவர் எஸ்.நாகராஜன் தலைமை வகித்தார்.உதவி கவர்னர்கள் பி.ரெங்கநாதன், கே. நானா (எ) நாகரத்தினம், டி.அருள் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவர்னர்கள் கவுன்சில் சேர்மன் ஜோ.வில்வராயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பி.முத்தையா பிள்ளை தன்னம்பிக்கை உரையாற்றினார்.

முன்னாள் மாவட்ட கவர்னர்கள் வி.பாஸ்கரன்,டி.ஏ.நெல்லை நாயகம்,எச்.ஷாஜகான், எம்.அசோக் பத்மராஜ், ஜெ.நவமணி,டாக்டர் கே.விஜயகுமார், டாக்டர் சின்னதுரை அப்துல்லா, ராஜகோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். ஏற்புரை ஆற்றிய இதயம் வி.ஆர்.முத்துவுக்கு ராமநாதபுரம் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் ஏ.ரவிச்சந்திர ராமவன்னி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.செயலாளர் கே.செந்தில்குமார் நன்றி கூறினார்.இராமநாதபுரம் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் பிரதான ஏற்பாடு செய்தனர்.பரமக்குடி, கீழக்கரை, இராமேஸ்வரம், உச்சிப்புளி ரோட்டரி சங்கம் , ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி கோல்டன் ரோட்டரி சங்கம் , ராமநாதபுரம் ராயல்ஸ் ரோட்டரி சங்கம், ராமநாதபுரம் கோரல் சிட்டி ரோட்டரி சங்கம், ராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி சங்கம் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!