இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இலஞ்சம் ஒழிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு தின விழா இராமநாதபுரத்தில் நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று லஞ்சம் ஒழிப்பு ஊழல் எதிர்ப்பு தினமாக மக்கள் பாதை இயக்கம் சார்பாக அனுசரிக்கின்றனர்.அதன் அடிப்படையில் இன்று இராமநாதபுரத்தில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் முன்னிலை வகித்தார்.மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் வீரக்குமார் வரவேற்றார் .இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் வாழ்த்துரை வழங்கினார்.திருப்புல்லாணி ஒன்றிய பொறுப்பாளர் கிளாட்வின் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றும் அதை கையாளும் வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரை ஆற்றினார்.இந்த நிகழ்வில் நயினார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் சிலம்பரசன், மாணவரணி பொறுப்பாளர் மதிவண்ணன், தேவிபட்டினம் ஊராட்சி பொறுப்பாளர் உலகு ராஜ், சமூக சேவகர் சாகுல் ஹமீது , ரத்னராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட கொடை திட்ட பொறுப்பாளர் பாலாஜி நன்றியுரை கூறினார்.







You must be logged in to post a comment.