நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளபட்டி ஊராட்சி மாலத்தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகளான சுத்தமான குடிநீர், சாக்கடை ,பொது கழிப்பறை, சுகாதார வசதிகள் மற்றும் மயானவசதி இல்லை எனவும்.
மேலும் 100 நாள் வேலைக்கான அட்டை வழங்காமல் தங்களது பகுதி பொதுமக்களை ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணிப்பதாகவும் சாக்கடை வசதிகள் இன்றி தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதிகமான கொசுக்கள் உற்பத்தியாகி இரவு பகல் பாராமல் கொசுக்கள் கடிப்பப்பதால் இப்பகுதியில் தொற்று நோய்கள் பரவி வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் அப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மயான வசதிகள் இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் அடக்கம் செய்யப்பட்டு வருவதால் தனியாக மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கூறி கோரிக்கை மனுவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மேலும் உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார் ஆனாலும் இதேபோன்று பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அடிப்படை வசதிகள் செய்து தர மனுக்கள் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் கலைந்து செல்ல மறுத்து பொதுமக்கள் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது…




You must be logged in to post a comment.