17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம்,அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விழிப்புணர்வு, முகாம்..!

தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம்,அம்மைய நாயக்கனூர் காவல்துறையினர் விழிப்புணர்வு, முகாம்..!

எழுதியவர்: Askar November 24, 2019, 3:17 pm

அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் இழப்புகள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தின் சார்பில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் அதனால் ஏற்படும் இழப்புகள் மற்றும் பிரச்சனைகள் காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள சட்ட சிக்கல் இன்றைய நடைமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர், இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தங்கள் குடும்பத்தினர் நண்பர்கள் தங்களுடன் பணிபுரியும் நண்பர்கள் என அனைவரிடமும் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறி தலைக்கவசம் அணிந்து செல்ல கட்டாயப்படுத்த வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினர்.

எனவே கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம் விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தபட்டது.

கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், இரு சக்கர வாகனஓட்டிகள், வாகஓட்டிகள் பொதுமக்கள் என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்திற்கு துணை ஆய்வாளர் பாலமுத்தையா தலைமை தாங்கினார் மேலும் காவலர்கள் சரவணன், சக்திவேல், முருகன் மற்றும் கூட்டத்தின் முடிவில் காவலர் முனியாண்டி நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!