ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகரில் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் உயர்மட்ட மேம்பாலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரையின் முக்கிய பிரதான சாலையான சர்வேயர் காலனி முதல் அய்யர்பங்களா வரை சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக இருக்கும் பழமையான 50க்கு மேற்பட்ட மரங்கள் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு சாலை விரிவாக்கப் பணிகள் உயர்மட்ட மேம்பால பணிகள் நடை பெற்றாலும்..மரங்களை வெட்டி சாய்க்காமல் அதனை வேருடன் பிடுங்கி வேறு இடங்களுக்கு நட்டால் அந்த மரம் உயிர் பெறும் அப்படி ஒரு செயலை நெடுஞ்சாலைத்துறையினர் செய்யாமல் பழமையான மரம் என்று கூட பாராமல் 50க்கும் மேற்பட்ட மரங்களை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்டு வருகிறது இது சமூக ஆர்வலர்களிடையே வேதனை அளிக்கிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்







You must be logged in to post a comment.