18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்தில் சிறுவன் பலி

திருமங்கலம் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்தில் சிறுவன் பலி

எழுதியவர்: mohan November 24, 2019, 1:41 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மினிவேன் கவிழ்ந்து விபத்தில் சிறுவன் பலி. 13 பேர் படுகாயத்துடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி. மதுரை கப்பலூர் பகுதியை சேர்ந்த செக்கானூரணியில் உள்ள திருமண விழாவிற்கு சென்றுவர திரும்பும்பொழுது திருமங்கலம் அடுத்த கரடிக்கல் செட்டிகுளம் விலக்கு அருகே மினி வேன் கவிழ்ந்த விபத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவன் நிகழ்விடத்திலேயே பலியானான். மேலும் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் 108 வாகனம் மூலமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!