தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் தலைமையில்
திங்கள்கிழமை தோறும் குறைதீர் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம்.அதன் படி, தென்காசி மாவட்டத்தின் முதல் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 25 ஆம் தேதி திங்கள் காலை 11 மணிக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.மேலும், குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனு மூலம் தெரிவித்துப் பயன்பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.