18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே ஜோதிமாணிக்கம் கிராமத்தில் குடிநீருக்காக அரசு சார்பில் அமைக்கபட்டுள்ள போர்வெல் ஆழ்துளை கிணறை மூட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

உசிலம்பட்டி அருகே ஜோதிமாணிக்கம் கிராமத்தில் குடிநீருக்காக அரசு சார்பில் அமைக்கபட்டுள்ள போர்வெல் ஆழ்துளை கிணறை மூட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

எழுதியவர்: mohan November 24, 2019, 12:35 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜோதிமாணிக்கம் கிராமத்தில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு குடிநீர் தேவைக்காக செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில் 2லட்சம் மதீப்பீட்டில் போர்வெல் மூலம் 500அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் ஜோதிமாணிக்கம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் அந்த ஆழ்துளை கிணற்றில் நீர் இல்லாமல் வறன்டு போன நிலையில் ஆழ்துளை கிணறு செயல்படாமல் கேட்பாடற்று போயின.

காலப்போக்கில் அதனை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உயிர்பலி ஏற்படும் முன் இந்த ஆழ்துளை கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி மணப்பாறை கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் மூலம் உபயோகமில்லாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டுமென அனைத்து மாவட்ட ஆடசியர்களும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!