மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பருத்தி அதிகம் பயிரிட்டுள்ளனர். மேலும் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள கிராமங்களான கணவாய்பட்டி, சேடபட்டி, பெருங்காமநல்லூர் போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பெரும்பாலான விவசாயிகள் பருத்தியை மிகுந்த ஆர்வத்துடன் பயிரிட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக இந்த பகுதிகளில் பருத்தி நல்ல விளைச்சலை கண்டுள்ளது. மேலும் 1பருத்தி செடிக்கு 20காய்க்கு மேல்
விளைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் தற்போது மழை காலம் என்பதால் பருத்தி காய்கள் அனைத்தும் வெயில் அடிக்க தொடங்கினால் தான் பருத்தி வெடித்து சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இந்நிலை நீடித்தால் ஒரு மாதம் கழித்து பருத்தி எடுக்கும் போது அமோக விளைச்சல் வரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.மேலும் கடந்த வருடம் பருத்தி 1கிலோ 25ருபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருடம் பருத்தி சாகுபடி செய்வதற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் பருத்திக்கு போதிய கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
உசிலம்பட்டி பகுதியில் தொடர் மழை காரணமாக பருத்தி விளைச்சல் அமோகம். விவசாயிகள் மகிழ்ச்சி
எழுதியவர்: mohan November 24, 2019, 11:49 am




You must be logged in to post a comment.