18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

மதுரை மாநகர பொதுமக்களுக்கு காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்

எழுதியவர்: mohan November 24, 2019, 11:39 am

உங்களுடைய எதிர்கால கனவுகளை நோக்கியே உங்கள் சிந்தனைகள் இருக்கவேண்டுமே தவிர ஆபத்தை விளைவிக்கும் செல்ஃபியை நோக்கி அல்ல…செல்ஃபி எனும் அற்ப சந்தோசத்திற்கு ஆசைப்பட்டு உங்களது அன்றாட வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள்…தன்னிலை மறந்து செல்ஃபி எடுத்து மகிழாமல் தன் குடும்பம் தனக்கு பின்னால் தனிமைப்படுத்தப்படும் என்பதை உணர்ந்து பாதுகாப்பாக இருங்கள்…

செல்போனில் செல்ஃபி எடுப்பதால் ஏற்படும் அபாயம் மற்றும் ஆபத்துக்ளை ஒரு நிமிடம் சிந்தித்து கவனமாக செயல்படுங்கள்…செல்ஃபி எனும் எமனை துரத்தி துரத்தி அழைக்காதீர்கள்…உங்களுடைய செல்ஃபி ‘செம்ம” என்று மற்றவர்கள் உங்களை புகழும் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு செல்ஃபி எடுத்து மகிழாதீர்கள் அதன் பின் விளைவுகள் விபரீதத்தில் முடிந்துவிடும்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!