17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் நோய் பரவும் அபாயம்

இராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் நோய் பரவும் அபாயம்

எழுதியவர்: mohan November 24, 2019, 11:19 am

இராமநாதபுரம் நகர் பகுதியான காட்டு பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.அதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளளும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இராமநாதபுரம் நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

அப்பகுதிகளில் நகராட்சியின் சார்பாக குப்பைத்தொட்டி எதுவும் வைக்காப்படாததால் தெருக்களில் குப்பைகள் குவியும் அவலநிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இராமநாதபுரம் நகராட்சி பொது மக்களின் நலன் கருதி சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!