17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வாரசந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை உடனடியாக அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர்.!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வாரசந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை உடனடியாக அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர்.!

எழுதியவர்: Askar November 24, 2019, 10:41 am

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வாரசந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களை உடனடியாக அப்புறப்படுத்திய காவல் ஆய்வாளர்.!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் காய்கறி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கூடமாக (சந்தை) ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளில் நடைபெற்று வருகிறது. இங்கு வீட்டு உபயோக உணவு தானியம் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்கு அருகாமையில் உள்ள கிராமத்தை சேர்ந்த சுமார் ஐந்து நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், அந்த சந்தையின் வாசல் வழி மிகவும் குறிகியதாக சுமார் 10 அடி மட்டுமே! உள்ளது. இதில் பாதையை மறித்து இருபக்கமும் வியாபாரிகள் கடைபோட்டு இருப்பதால் ஆண் பெண் பாகுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் இடித்துக் கொண்டு சென்று வரக்கூடிய நிலை நீண்டகாலமாக தொடர்கிறது. இந்த நெருங்கிய வாயிற்படியை பயன்படுத்தி திருடர்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் பணம் மற்றும் செல்போன்களை திருடிச்செல்லும் நிலையும் உள்ளது. இதை கருத்தில் கொண்டு வாரசந்தையை பராமரிப்பு செய்து செய்து வரும் உரிமையாளர் பொதுமக்கள் சந்தைக்குள் சென்று வர ஏதுவாக வாயிற்படியை அகலப்படுத்துவதோடு மேடுபள்ளமாகவும் சேறும் சகதியுமாகவும் கிடப்பதை சீர்படுத்திட வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றி இறக்கும் சாக்கில் தங்களுடைய ஆட்டோக்களை சாலையின் இருபகுதியிலும் நிறுத்திக் கொள்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு அந்த வழியாக நெடுந்தூரம் செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை (22/11/19 இன்று) இருந்தபோது தகவலறிந்து வந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்தின் உடனடியாக தலையிட்டு ஆட்டோக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!