மதுரை மாவட்டம் வில்லாபுரம் அருகே பழமையான மரம் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென வில்லாபுரம் ஆவணியாபுரம் சாலையில் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரத்தை, மரம் அறுக்கும் இயந்திரம் மூலமாக அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து ஏற்பட்ட சமயத்தில் பொதுமக்கள் யாரும் அருகில் இல்லாததால் உயர்த்த சேதம் ஏதும் ஏற்படவில்லை. திடீரென மரம் விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பஉ ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்










You must be logged in to post a comment.