17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளத்தில் விழுந்த மாடுகளை போராடி மீட்ட தல்லாகுளம் தீயணைப்பு துறையினர்!

பள்ளத்தில் விழுந்த மாடுகளை போராடி மீட்ட தல்லாகுளம் தீயணைப்பு துறையினர்!

எழுதியவர்: mohan November 23, 2019, 6:11 pm

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் பகுதியில் சுமார் 250 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் மதுரை செல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அந்த பகுதியை சேர்ந்த நான்கு மாடுகள் எதிர்பாராத விதமாக உள்ளே விழுந்தது பல மணிநேரம் போராடியும் மீட்க முடியாத நிலையில் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கபட்டது.அதனை தொடர்ந்து சம்பவத்தில் வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் நிலைய அதிகாரி திரு வேல்முருகன் அவர்கள் தலைமையிலான குழுவினர் ஒரு நேரம் போராடி மாடுகளை மீட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!