17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டிலிருந்து பொப்பிடி செல்லும் சாலையில் தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பாலக்கோட்டிலிருந்து பொப்பிடி செல்லும் சாலையில் தடுப்பு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan November 23, 2019, 4:31 pm
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டிலிருந்து பொப்பிடி வழியாக ஐந்தாவதுமையில் வரை 7கி.மீ தூரம் பழுதான சாலைலையை புதுப்பித்து புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தார்சாலையை புதுப்பிக்கும் வகையில் கடந்த 10நாட்களுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. மேலும் சாலையோரம் சாலையில் இருந்து 10அடிக்கும்  கீழ் பள்ளம் உள்ள இடத்தில் தடுப்பு சுவர்கள் மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததாலும் மிகவும் குறுகிய பகுதியில் அதிகலைவுகள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதில் பல்வேறு கிராம பகுதிகளில்   புதிய வேகத்தடை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட வேகத்தடைக்கு வண்ணம் பூசாமல், ரிப்லெக்ஸ் ஒளி எழுப்பும் தகட்டை பெருத்ததால்  பகல் மற்றும் இரவு நேரங்களில் இருசக்கர வகனத்தில் செல்லுபவர்கள் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும் இச்சாலையில் தரைப்பாலம், குறுகிய பாலம், சாலை வளைவு பகுதி, பள்ளிப்பகுதி, ஆற்றுப்பகுதி, பிரிவுசாலை என எந்த ஒரு பகுதியிலும் எச்சரிக்கை பலகை இல்லததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகின்றது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கை பலகை மற்றும் சாலையில் ரிப்லெக்ஸ் ஒளி எழுப்பும் தகடு, வேகத்தடைக்கு வண்ணம் பூசுதல் வலைவு பகுதியில் தடுப்பு ஆகியவை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!