18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அரசு ஆசிரியர்கள் குடியிருப்பில் பயன்படாமல் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை.

உசிலம்பட்டி அரசு ஆசிரியர்கள் குடியிருப்பில் பயன்படாமல் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரிக்கை.

எழுதியவர்: mohan November 23, 2019, 4:02 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ளது அரசு ஆசிரியர்கள் குடியிருப்பு . இந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதி மக்களுக்காக நகராட்சி சார்பில் குடிநீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டனர். ஆனால் காலப்போக்கில் குடிநீர் பற்றாக்குறை காரணத்தினால் அந்த குடிநீர் தொட்டியில் நீர் நிரப்பபடாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தொட்டி பயன்பாடில்லாமல் போனது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குடிநீருக்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். உடனே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் சேதமடைந்துள்ள குடிநீர் தொட்டியை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!