சமயநல்லூர் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் DSP ஆனந்த் ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை போலீசார்
ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த அலங்காநல்லூர் கோட்டைமேடு ராமர் மகன் ஜெயகிருஷ்ணன்(23) குறவன்குளம் மணிகண்டன் மகன் சூரியகுமார்(22) என தெரியவந்தது. இவர்கள் பெண்களிடம் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பதை கண்டறிந்த போலீசார், விசாரணை செய்ததில் NP கோட்டை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடம் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள 38 பவுன் தங்க நகைகளை மீட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.