18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அருகே சிமெண்ட் கலவை தொழிற்சாலையில் புகை பொதுமக்கள் போராட்டம்

காட்பாடி அருகே சிமெண்ட் கலவை தொழிற்சாலையில் புகை பொதுமக்கள் போராட்டம்

எழுதியவர்: mohan November 23, 2019, 1:07 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராம ஏரி அருகில் தனியார் சிமெண்ட் கலவை தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் தேவைக்காக ஏரிபகுதியில் பெரிய போர்வெல் போட்டு நீர் உறிஞ்சப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது மேலும் தொழிற்சாலையிலிருந்து வரும் தூசி மற்றும் புகை காரணமாக அப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுவதுடன் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.கலவைகளை ஏற்றி செல்லும் லாரிகளால் போக்குவரத்து இடஞ்சல் ரோடுகளில் மேடு பள்ளம் உண்டாகிறது இதனை கண்டித்து இப்பகுதி மக்கள் லாரிகளை சிறைபிடித்தனர். பின்பு போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியல் கைவிடப்பட்டது.இப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் சிமெண்ட் கம்பெனி நிர்வாகிகளிடம் பணத்தை வாங்கி கொண்டு இருப்பதால் இந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!