18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியில் தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி.

உசிலம்பட்டி அருகே பேயம்பட்டியில் தரமற்ற சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி.

எழுதியவர்: mohan November 23, 2019, 1:01 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேயம்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒர வாரத்திற்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தார் சாலை சேதமடைந்து கற்கள் அனைத்தும் பெயர்ந்ததும், சாலையில் விரிசலும் ஏற்பட்டுள்ளது.இதனால் தார்சாலை தற்போது ஜல்லி கற்கள் சாலையாக உருவெடுத்து வருகிறது.

மேலும் மழைகாலங்களில் கடமைக்காகவும், கண்துடைப்புக்காகவும், இதுபோன்று தரமற்ற தார்சாலை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் தார் சாலை அமைத்தவுடன் சாலையின் இருபுறங்களிலும் மணல் ஏதும் கொட்டப்படாததால் கற்கள் அனைத்தும் பெயர்ந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டுவருகின்றனர். தரமற்ற சாலைகள் அமைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!