17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் சிறப்பு மருத்துவ முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

நெல்லையில் சிறப்பு மருத்துவ முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan November 23, 2019, 10:09 am

நெல்லை மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் சிறப்பு முகாம் திருப்பணிகரிசல் குளம் அருகிலுள்ள வாகைகுளத்தில் வைத்து நடைபெற்றது. சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் டாக்டர்.பிர்தௌசி மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.மேலும் டெங்கு காய்ச்சலை ஒழிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தலைமையில் டெங்கு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. இதில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கதிரவள்ளியம்மாள் ஆசிரியர்கள் சாமுவேல், பொன்னுசாமி மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!