18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி

அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் சென்ற 3 பேர் உடல் நசுங்கி பலி

எழுதியவர்: mohan November 23, 2019, 9:39 am

மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு பிறந்த நாள் என்பதால் காளவாசல் மற்றும் பொன்மேனி பகுதியை சேர்ந்த குணா பிரசன்னா இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் விழாவை  கொண்டாடிவிட்டு தினேஷ் என்பவரை திருமங்கலத்தில் உள்ள அவர் வீட்டிற்கு இரவு காரில் நண்பர்கள் அழைத்து செல்லும்போது மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை  புளியங்குளம் என்னுமிடத்தில் சாலையில் எதிரே அதிவேகமாக வந்த அரசு விரைவு பேருந்து கார் மீது நேருக்கு மேதியது. இதனால் கார் உருகுலைந்து போனது. சம்பவ இடத்திலேயே கார் உள்ளேயே நசுங்கி முன்று பேரும் பலியானர்கள். இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து காவல் துறையினர் மற்றும் மதுரை  தீயணைப்பு மற்றும் திருமங்கலம் தீயணைப்பு துறையினர் துறையினர்  வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ஈடுபாடு சிக்கிய உடல்களை மீட்டு உடலை கைப்பற்றி மதுரை அரசு இராஜஜி மருத்துவமனைக்கு உடல் பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதி சமுக ஆர்வலர்கள் கூறியதாவது .அரசுபஸ் மற்றும் தனியார் பஸ்கள் இரவு நேரங்களில் அதிவேகமாக ரிங் ரோட்டில் வராமல் நகருக்குள் வருவதால் விபத்துக்கள் நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிவேக வரும் விரைவு பேருந்தை நகருக்குள் வராமல் இருக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!