18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாவட்ட அளவிலான நடைபெற்ற கபாடி போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.!

மாவட்ட அளவிலான நடைபெற்ற கபாடி போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.!

எழுதியவர்: Askar November 22, 2019, 9:50 pm

மாவட்ட அளவிலான நடைபெற்ற கபாடி போட்டியில் நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை.!

திண்டுக்கல் மாவட்டம் க. தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்,மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் பங்கு பெற்ற நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.தொடர்ந்து இப்பள்ளி மாணவர்கள் பல்வேறு வகையான சாதனைகள் படைத்து வருவது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் கபாடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் P.விஜயா சான்றிதழ்கள் மற்றும் கோப்பையும் வழங்கிப் பாராட்டினார்.மேலும் பள்ளியின் தாளாளர் J.சுதாகரன், தலைமை ஆசிரியர் R.விஜயகுமார், மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த ஆசிரியர் சுதர்ஸனையும் வெகுவாக பாராட்டி மகிழ்ந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!