இராமநாதபுரம் மாவட்ட பசுமை தாயகம் சார்பில் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற விழாவிற்கு பாமக.,
மாவட்ட செயலாளர் சை.அக்கிம் தலைமை வகித்தார். சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் நூர் முகமது துவக்கி வைத்தார். இராமநாதபுரம் ஒன்றிய செயலர் ஜெமீல்கான் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீவா வரவேற்றார். கீழக்கரை நகர் செயலாளர் லோகநாதன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் சதீஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இதில் ஏராளமான மக்கள் 2 கிலோ பாலித்தின், பிளாஸ்டிக் குப்பையை கொடுத்து ஒரு கிலோ அரிசி வாங்கிச் சென்றனர்.மாவட்ட பொருளாளர் ஆயிஷா நன்றி தெரிவித்தார்.
இராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் குப்பைக்கு அரிசி வழங்கும் முகாம
எழுதியவர்: mohan November 22, 2019, 6:00 pm




You must be logged in to post a comment.