திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக உரிமையை பாதிக்கும் திட்டங்களை நிறுத்துவதில் தோல்வி கண்ட அதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அண்ணா சிலை அருகே நடைபெற்றது. முன்னாள்
அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கினார்.கர்நாடக அரசு தென்பெண்ணையாற்றில் 150 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. தமிழக அரசு இந்த வழக்கில் முறையாக வாதாடவில்லை.முறையாக வாதங்களை முன் வைக்கவில்லை.சரியான முறையில் வழக்கை கையாளவில்லை எனக்கூறி திமுகவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டப்பட்டால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்கள் பாதிக்கப்படும். விவசாயிகளுக்கான பாசன நீர் கிடைக்காது, குடிநீருக்கும் பொதுமக்கள் திண்டாட வேண்டிய நிலைமை ஏற்படும்.
அதிமுக அரசை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்,
எழுதியவர்: mohan November 21, 2019, 4:50 pm




You must be logged in to post a comment.