17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன.

உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் விதமாக மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன.

எழுதியவர்: mohan November 21, 2019, 1:58 pm

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரம் நிலையில்அதனைத்தடுக்கும் விதமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தமிழக அரசு அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நிலவேம்புக் கசாயம் வழங்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் நிலவேம்புக்கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட காய்ச்சல் பிரிவு மருத்துவ குழு சார்பில் மருத்துவர் தினேஸ் பாபு, மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இதில் தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!