17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே பிரசவித்த இளம்பெண் வயிற்றில் ஊசி உறவினர்கள் போராட்டம்

இராமநாதபுரம் அருகே பிரசவித்த இளம்பெண் வயிற்றில் ஊசி உறவினர்கள் போராட்டம்

எழுதியவர்: mohan November 21, 2019, 11:03 am

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மரவட்டி வலசை சேதுபதி நகரைச்சேர்ந்த கார்த்தி மனைவி ரம்யா,21. நிறைமாத கர்ப்பிணியான இவர்,உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 17 ஆம் தேதி பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டார்.19 ஆம் தேதி காலை மருத்துவர் பணியில்லாததால் செவிலியர்கள சக்திபாமா, அன்பு ஆகியோர் பிரசவம் பார்த்தனர். ரம்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு வலி அதிகரித்து ரத்த கசிவு ஏற்பட்டது. இதனால், மேல்சிகிச்சைக்காக ரம்யா, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு எக்ஸ்ரே எடுத்து பாத்ததில் வயிற்றுக்குள் ஊசி கவனக்குறைவாக வைத்து தைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து ரம்யாவின் உறவினர்கள் உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு, பணியில் கவனக்குறைவாக இருந்த சம்பந்தப்பட்ட செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்..இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு ரம்யா கொண்டு செல்லப்பட்டார். அங்கு துரித சிகிச்சை அளித்து ரம்யா வயிற்றுக்குள் இருந்த ஊசி அப்புறப்படுத்தப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!