17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோட்டில் காய்கறி மார்க்கெட் அமைக்க பொதுமக்களின் கோரிக்கை

பாலக்கோட்டில் காய்கறி மார்க்கெட் அமைக்க பொதுமக்களின் கோரிக்கை

எழுதியவர்: mohan November 21, 2019, 10:57 am

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் வறட்சியின் காரணமாக சாம்பார் கத்திரிக்காய் வரத்து குறைவினால் விலை உயர்ந்து கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக 59 சதவீதம் மழை அளவு குறைவாக பெய்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மாவட்டத்தில் பாலக்கோடு , காரிமங்கலம்,சோமனஹள்ளி, காட்டம்பட்டி, பெல்ரம்பட்டி, மாரண்டஹள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாம்பார் கத்திரிக்காய் சாகுபடி செய்வது வழக்கம் . உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிக வரத்து காரணமாக சாம்பார் கத்திரிக்காய் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 10ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. குளிர்காலத்தில் சாம்பார் கத்திரிக்காய் விளைச்சல் இருமடங்காக அதிகரிக்கும் இந்த காலகட்டத்தில் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதால் விவசாய நிலங்கள் தரிசாக உள்ளது.ஒருசில விவசாயிகள் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி குறைந்த பரப்பிலான நிலங்களை சாம்பார் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு 1.5 இலட்சம் வரை கத்திரிக்காய் சாகுபடி செய்ய செலவாகிறது, ஒரு முறை நடவு செய்தால் 6 மாதம் வரை வாரந்தோறும் 1 ஏக்கருக்கு குறைந்த பட்சம் 3 டன் காய் அறுவடை செய்ய முடிகிறது ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே லாபம் கிடைக்கும் தற்போது சாம்பார் கத்திரிக்காய் வரத்து குறைவு மற்றும் பூச்சி, புழு, தாக்குதலால் பாதிப்படைந்து காணப்படுவதால் பண்டிகை, முகூர்த்த நாட்கள், தொடர்ந்து வருவதால் தேவை அதிகரிப்பு காரணமாக சாம்பார் கத்திரிக்காய் விலை கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு நல்ல லாபம் என்றாலும்  தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறைந்த பரப்பளவில் மட்டுமே தற்போது சாகுபடி செய்யப்படுகிறது சாம்பார் கத்திரிக்காய் விலை இன்னும் சில வாரங்களில் மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலக்கோட்டில் தக்காளி மார்க்கெட் போன்று காய்கறி மார்க்கெட் அமைத்ததால் போக்குவரத்து செலவு குறையும் எனவே தமிழக அரசு உடனடியாக பாலக்கோட்டில் காய்கறி மார்க்கெட் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!