17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை .அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் பங்க் அருகே தீ விபத்து ஏற்பட வாய்ப்பு

மதுரை .அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் பங்க் அருகே தீ விபத்து ஏற்பட வாய்ப்பு

எழுதியவர்: mohan November 21, 2019, 10:42 am

மதுரை மாவட்டம் எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் உள்ள பொன்மேனி பனிமலையில் பேருந்துகளுக்கான டீசல் நிரப்பும் பணி மனை உள்ளேயே உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார வாரியம் பராமரிப்பு காரணமாக மின் வயர்கள் மேலே இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றினர். பொன்மேனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதியில் நிரப்பும் பகுதியில் காய்ந்த மர கிளைகள் அதிக அளவில் காணப்படுகிறது. யாரேனும் சிகரெட் நெருப்பு பட்டால் உடனடியாக தீப்பிடிக்கும் நிலையில் உள்ளது. இதனால் டீசல் நிரப்பும் பகுதியில் மிகப்பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் அங்கே போக்குவரத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருசக்கர வாகனங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அருகிலேயே உள்ளது. இதனால் மிகப்பெரிய விபத்துகள் ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளதால் உடனடியாக காய்ந்து உள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!