17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் புற்று நோய் தடுப்பு பரிசோதனை முகாம்

நெல்லையில் புற்று நோய் தடுப்பு பரிசோதனை முகாம்

எழுதியவர்: mohan November 21, 2019, 10:13 am

நெல்லை மாவட்டம் பேட்டை காமராஜர் நகர்மன்ற மேனிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் திருப்பணிகரிசல் குளம் அருகிலுள்ள வகைக்குளத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.தொடர் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி முப்பிடாதி அம்மன் கோவிலில் வைத்து நடைபெற்றது. இதில் புற்று நோய் குறித்தும்,அதன் பாதிப்புகள்,தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் நெல்லை கேன்சர் கேர் சென்டர் சார்பாக டாக்டர் ஜெயபாரதி கலந்து கொண்டு புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் சிறப்புரையாற்றினார். பொதுமக்கள் பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் திட்ட அலுவலர்  கதிரவள்ளியம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சிகளை முதுகலை பொருளாதார ஆசிரியர்பொன்னுசாமி தொகுத்து வழங்கினார். இறுதியில் ஆசிரியர்சாமுவேல் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்     அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!