17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர் காவல்துறை முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர் காவல்துறை முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan November 21, 2019, 9:33 am

நூதன முறையில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பொருட்களை திருடும் நபர் பற்றிய அறிவிப்பு.கடந்த சில தினங்களாக மதுரை மாநகருக்குள் நூதன முறையில் புகைப்படத்தில் உள்ள நபர் மதுரை மாநகரில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குள் நுழைந்து தான் ஊமை என்றும் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் தனக்கு ஏதேனும் நன்கொடை வழங்கும்படியும் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுத்து அவர்களது கவனத்தை திசைதிருப்பி அவர்கள் துண்டு பிரசுரத்தை படித்து முடிப்பதற்குள் அங்குள்ள பணம், செல்போன் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு சென்றுவிடுகிறார்.எனவே மதுரை மாநகர பொதுமக்கள் மேற்கண்ட நபரை நேரில் பார்த்தாலோ அல்லது அவரைப்பற்றிய தகவல்கள் ஏதேனும் தெரியவந்தாலோ உடனடியாக கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு மேற்படி நபர் பற்றிய தகவல்களை தருமாறு மதுரை மாநகர காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

நகர் குற்றம் காவல் உதவி ஆணையர் 83000-19915

B1 விளக்குத்தூண் கு.பி காவல் ஆய்வாளர் 94981-80208

B1 விளக்குத்தூண் (கு. பி) காவல் உதவி ஆய்வாளர் 94981-80102.

கீழை நியூஸ் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!