இராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில். 66 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ப.மு.முருகேசன் வரவேற்றார். 463 பயனாளிகளுக்கு ரூ.15.85 கோடி மதிப்பில் நலத்திட்ட
உதவிகள்,2011 – 19 வரை 94 ஆயிரம் விவசாயிகளுக்கு பயிர் கடனுதவி,சாதனை படைத்த பல்வேறு கூட்டுறவு வங்கிகளுக்கு கேடயம், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கி மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் பேசினார்.ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாநில பனை வெல்லம் கூட்டுறவு சம்மேளன தலைவர் சேதுபாலசிங்கம், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் ஜெயஜோதி, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஏ.ஆரிப் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டுறவு சரக துணை பதிவாளர் ரா.லட்சுமணக்குமார் நன்றி கூறினார்.
இராமநாதபுரத்தில் கூட்டுறவு வார விழா
எழுதியவர்: mohan November 19, 2019, 6:35 pm




You must be logged in to post a comment.