17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan November 19, 2019, 3:12 pm

திருநெல்வேலி,தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் ச.ம.க வினரிடமிருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி சுரண்டை நாடார் வாலிபர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளர் தொழிலதிபர் சுரண்டை எஸ்.வி கணேசன் தலைமை வகித்து சுமார் 250 பேர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது தென்காசி தொகுதி எம்.எல்.ஏ வாக சமக தலைவர் சரத்குமார் செயல்பட்ட போது தென்காசி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென்காசி தனி மாவட்ட கோரிக்கையை சட்டமன்றத்திலும், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேரில் வலியுறுத்தியதின் அடிப்படையில் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசுக்கும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

சென்னை மாநகராட்சி மேயராக சமக தலைவர் சரத்குமார் போட்டியிட வேண்டும். வரும் உள்ளாட்சி தேர்தலில் நெல்லை மற்றும் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சமகவிற்கு கவுரவமான விதத்தில் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகள் ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற சமக தொண்டர்கள் கடுமையாக உழைப்போம் என தெரிவித்தார் ‌.இக் கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன், மாநில மகளிரணி துணை செயலாளர் சுபலதா, நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாநகர மாவட்ட செயலாளர் சேவியர், பாளை சட்டமன்ற தொகுதி செயலாளர் ஸ்ரீதர், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் கபிலன், கீழப்பாவூர் வடக்கு பாலன், கணையம் ராஜபாண்டியன், பஞ்சாங்கம், ஆலங்குளம் மேற்கு ராஜா, ஆலங்குளம் வடக்கு ஜேபி, முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன், மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாடகர் செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் ராமர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைகனி, சேகர், மாடசாமி, ராஜ், சந்தோசகனி, செல்வராஜ், மாடசாமி, ராஜபிரபு, அரவிந்த், முருகன், ரவிக்குமார், சேர்மக்கனி, உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பங்கேற்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!