18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு. சாலை மறியல்..

உரக்கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு. சாலை மறியல்..

எழுதியவர்: mohan November 19, 2019, 1:05 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட  பழங்காநத்தம் மாடக்குளம் மெயின் ரோடு விகேபி நகர் வார்டு பகுதிகளில் தேசிய ஊரக திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி சார்பாக உரக்கிடங்கு அப்பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைந்து செல்லுமாறும் வேண்டுமென்றால் மதுரை மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு கொடுக்கவும் அறிவுறுத்தினர். மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது இந்த திட்டமானது மிகவும் நல்ல திட்டமானது. இதனால் பொதுமக்களுக்கு எளிதில் உரமும் மக்கும் குப்பை மக்கா குப்பை தனித்தனியாக பிரித்து மக்கும் குப்பையை உரமாக்கி மக்கா குப்பையை மதுரையிலுள்ள வெள்ளைக் கல்லில் உள்ள குப்பை கிடங்கில் அழித்து விடுவோம் என தெரிவித்தனர். மேலும் இதனால் நிலத்தின் நீரோ துர்நாற்றம் எதுவும் வீசாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் சிலரிடம் கேட்டபோது அவர்களும் இதே போன்ற பதில்களே நமக்கு அளித்தனர். இத்திட்டமானது மிகவும் வரவேற்க வேண்டிய திட்டம் எனவும் இதுபோன்ற திட்டம் ஆங்காங்கே அமைத்தால் பொதுமக்களுக்கு நன்மையே என்று தகவல் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!