18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவு திட்டம்.. கீழக்கரையில் தொடக்க விழா

இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சிறப்பு எழுத்தறிவு திட்டம்.. கீழக்கரையில் தொடக்க விழா

எழுதியவர்: mohan November 19, 2019, 9:54 am

வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிக்கல்வி துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தொடக்க விழா கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன் வரவேற்றார். சிறப்பு பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி திட்டத்தை தொடங்கி வைத்து , அடிப்படை எழுத்தறிவு நூலை தமிழக பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டு பேசினார்.

இராமநாதபுரம் வட்டார வள மைய பயிற்றுநர் எஸ். உலகராஜ், தான் பயின்ற தேவிபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பராமரிப்பு நிதியாக ரூ.ஒரு லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார். உலகராஜை, அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார்.சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கருணாஸ் (திருவாடானை), என்.சதன் பிரபாகர் (பரமக்குடி), ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, துணை தலைவர் ஜெயஜோதி, ராம்கோ தலைவர் செ.முருகேசன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அ.அன்வர் ராஜா, முகமது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன், நெறியாளர் முகமது ஜகாபர், அதிமுக.,இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன், முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் ஆ. சுப்ரமணியன், ராம்கோ கூட்டுறவு துணைத்தலைவர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!