மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் வார்டு பொறுப்பு அலுவலர்களாக 100 காவல் உதவி ஆய்வாளர்களை நியமித்து ஒவ்வொரு வார்டிலும் காவல்துறை பொதுமக்கள்
நல்லுறவு கூட்டம் நடத்தி பொதுமக்களின் தேவைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து உடனடியாக அவற்றிற்கு தீர்வு காணும்படி அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறை வழங்கினார். அதன் அடிப்படையில் செல்லார் (ச&ஒ) காவல் நிலைய முக்கிய இடங்களில், இன்று தல்லாகுளம் (ச&ஒ) பகுதியில் தல்லாகுளம் உதவி ஆணையர் (குற்றப்பிரிவு),சந்திரன், D2 செல்லூர் (ச&ஒ) காவல் ஆய்வாளர்.கோட்டைச்சாமி வார்டு எண் 09-ல் உள்ள பொதுமக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.