மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டம் கூத்தியார்குண்டு ஊராட்சி துவக்கப்பள்ளியில் மதுரை ராசாஜி மருத்துவமனை மற்றும் திருப்பரங்குன்றம் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக தமிழ்நாடு அரசின் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவ அலுவலர் Dr.சிவக்குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். நிலையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலவலர் Dr. விஜயபாலன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவனாத்பாபு, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் முத்துவேல் மற்றும் கூத்தியார் குண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோரும் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், வரதராஜன் மற்றும் நிலையூர் ஊராட்சி செயலர் பரமசிவம் ஆகியோர் இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். பல்வேறு வகையான நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவர்கள் மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.கூத்தியார்குண்டு, தோப்பூர், நிலையூர் கருவேலம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம் முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.