திருவண்ணாமலை மாவட்ட திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் திருவண்ணாமலை நகர திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல்
குழுவின் பொறுப்பாளர் காலேஜ் ரவியிடம் நகரமன்ற உறுப்பினர் மற்றும் நகர மன்றத் தலைவருக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 36-வது வார்டு புனிதவல்லி நகரமன்ற உறுப்பினர்பதவிக்கு விருப்பமனு தாக்கல் செய்தனர். இதில்நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஏ கே ஆர் ரத்தினகுமார் குட்டி புகழேந்தி அருள்குமரன் டிஷ் ரமேஷ் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகர திமுக சார்பில் உள்ளாட்சித் தோ்தலுக்கு விருப்ப மனு
எழுதியவர்: mohan November 18, 2019, 5:12 pm




You must be logged in to post a comment.