17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தண்ணீர் லாரியில் வந்த கள்ள நோட்டுகள் பறிமுதல்- குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்.

மதுரையில் தண்ணீர் லாரியில் வந்த கள்ள நோட்டுகள் பறிமுதல்- குற்றவாளிகளை தேடி வரும் போலீசார்.

எழுதியவர்: mohan November 18, 2019, 3:24 pm

மதுரை ரயில் நிலையத்தில் உள்ள கிழக்கு நுழைவு வாயிலின் முன்பு தன்ணீர் சப்ளை செய்யும் லாரி நின்று கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல் மாவட்டம் கரைக்குறிச்சியை சேர்ந்த பூபதி என்ற டிரைவர் ஓட்டியுள்ளார் லாரியின் பின்பக்கம் பணம் உள்ள பை கிடந்துள்ளது. இது குறித்து டிரைவர் பூபதி அளித்த தகவலின் பேரில் திலகர் திடல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு பையை கைப்பற்றினர் அதில் 381 எண்ணிக்கையிலான 2000 ருபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து கள்ள நோட்டுக்களை யார் இங்கே விட்டது என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சிலநாட்களுக்கு முன் நமது கீழை நியூஸ் செய்திகள் தளத்தில் (சத்திய பாதை மாத இதழ்) மதுரையில் அதிக அளவு கள்ளநோட்டு வருவதாக இதனால் வியாபாரிகள் கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் செய்திகள் வெளியிட்டிருந்தோம் .இந்த நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட 2000 ரூபாய் கள்ளநோட்டு பிடிபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!