18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் தமிழக ஆசிரியர் கூட்டணி பேரணி

நிலக்கோட்டையில் தமிழக ஆசிரியர் கூட்டணி பேரணி

எழுதியவர்: mohan November 18, 2019, 1:02 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக ஆசிரியர் கூட்டணி பேரணி பஸ் நிலையத்தில் துவங்கிய நிலக்கோட்டை பிஎஸ்என்எல் டெலிபோன் டவர் அருகே உள்ள மண்டபம் வரை நடைபெற்றது.இப்பேரணியில் தொடர்ந்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிய உறுப்பினர்கள் இணையும் முகாம், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா ,ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற வர்களுக்கு பாராட்டு விழா ,தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா | தமிழக ஆசிரியர் கூட்டணி 27ஆம் ஆண்டு விழா ஐம்பெரும் விழா நடந்தது.விழாவிற்கு வத்தலக்குண்டு கல்வி மாவட்ட செயலாளர் ஆறுதல் தலைமை தாங்கினார் .திண்டுக்கல் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், வேடசந்தூர் கல்வி மாவட்டத் தலைவர் அந்தோணி , அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் சகாயம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி வரவேற்று பேசினார்..விழாவில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும் சங்க நிர்வாகிகளுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது..நிகழ்ச்சியில் சங்க மாநில நிர்வாகிகள் அண்ணாமலை, நம்பிராஜன்,சந்திரசேகர் ,முனியாண்டி மற்றும் நிலக்கோட்டை ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் செல்வராஜ் வட்டாரச் செயலாளர் முத்து காளை , வட்டார பொருளாளர் லியோ ஜோசப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.,

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!