18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இஸ்லாமிய சொற்பொழிவு

இஸ்லாமிய சொற்பொழிவு

எழுதியவர்: mohan November 18, 2019, 11:57 am

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ராமையா தெருவில் உள்ள எம்.எஸ்.திருமண மண்டபத்தில் மதுரை வாழ் திருப்பத்தூர் வட்டார இஸ்லாமிய உறவின்முறை சார்பில் கலந்துரையாடல் மற்றும் இஸ்லாமிய சொற்பொழிவு நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் முஹம்மது ஜலாலுத்தீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வின் போது பாரதியார் ரோடு இமாம் மஸ்ஜிதுன் நபவி ஜாமிஆ பள்ளிவாசல் ஷம்சுதீன்,பெங்களூர் பெரோஸ்கான் அல்புஹாரி, மதுரை மாவட்ட நிர்வாகிகள் தலைவர் முகமது சுல்தான்,செயலாளர் அப்பாஸ், துணைச் செயலாளர் முகமது மாலிக், பொருளாளர் சர்புதீன்,நிர்வாகஸ்தர் காஜாமைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!