தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நடைப்பெற்ற வியாபார சங்க நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மாநில மொபைல் சங்க தலைவர் வக்கறிஞர் சோமசுந்தரம் மணமக்களை வாழ்த்திய பின் பேசுகையில் சிறு வணிகர்கள் மற்றும் சிறுவியபாரிகளை பாதிக்கும் வகையில்
சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மண்டி ஆன்லைன் விளம்பரத்திற்க்கு கடும் கண்டணம் தெரிவித்தார் .மேலும் நடிகர் சரத்குமாரின் கருத்து கண்டிக்கதக்கதது .மேலும் ஆன்லைன் விளம்பரத்தில் நடித்த விஜய் சேதுபதியின் சங்க தமிழன் படத்தை ஒட்டுமொத்தமாக வணிகர் சங்கம் மற்றும் மொபைல் சங்கத்தினர் புறக்கணிப்பதாக தெரிவித்தார்.மேலும் மத்திய மாநில அரசுகள் சிறு குறு வியபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வண்ணம் ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்த வேன்டும் என கேட்டுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட மொபைல் சங்க மாவட்ட தலைவர் விநாயகம், துணைத் தலைவர் பாபு, திருப்பூர் மாவட்ட மொபைல் சங்க தலைவர் அன்பழகன், பாலக்கோடு வணிகர் சங்க தலைவர் முத்து முன்னாள் தலைவர் பொன்னுசாமி மற்றும் ஏராளமன வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடிகர்களுக்கு மொபைல் மற்றும் வணிக சங்கங்கள் கடும் கண்டணம்
எழுதியவர்: mohan November 18, 2019, 11:33 am




You must be logged in to post a comment.