HUMAN RIGHTS HUMAN CARE PROTECTION எனும் அமைப்பு ஒவ்வொரு வருடமும் சிறந்த சாதனையாளர்கள் சமூக சேவகர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்கப்படுத்தி கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கிவருகிறது.அந்த
வகையில் (16/11/2019) இராமநாதபுரத்தில் உள்ள இன்ஃபேண்ட் ஜீஸஸ் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.இதில் WOMEN DEVELOPMENT பிரிவில் விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை பேச்சிற்காகவும்,பெண்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தலுக்காகவும் வில் மெடல்ஸ் உலக சாதனை ஆய்வு மையத்தில் நிறுவனர் தலைவர் முனைவர் கலைவாணிக்கு HCHRP அமைப்பு விருது வழங்கி கௌரவித்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ரவிச்சந்திர ராமவன்னி கலந்துகொண்டார்.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் HCHRP மாநில செயலர் பன்னீர் செல்வம் செய்திருந்தார்.
சிறந்த சாதனையாளர்கள் விருது
எழுதியவர்: mohan November 18, 2019, 11:26 am




You must be logged in to post a comment.