18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுங்கச்சாவடி இலவசக்கழிப்பறையில் பணம் வசூல்

சுங்கச்சாவடி இலவசக்கழிப்பறையில் பணம் வசூல்

எழுதியவர்: mohan November 18, 2019, 11:17 am

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சுங்க சாலைக்கு அருகில் இருக்கக்கூடிய அரசின் நவீன கழிப்பறையை பயன்படுத்தும் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க கட்டணமில்லாத கழிப்பறையாக இருக்கக்கூடிய இந்த நவீன அரசு கழிப்பறையை பயன்படுத்தும் வெளியூர் மக்களிடமிருந்து அங்கே இருக்கக்கூடிய நபர்கள் கட்டண கழிப்பறையை போல் பத்து ரூபாய் வீதம் வசூல் செய்கின்றனர் .இது குறித்து அவர்களிடம் கேட்கும் பொழுது நாங்கள் இங்கே சுத்தம் செய்ய வருபவர்களுக்கு கொடுப்பதற்காகத்தான் பணம் கேட்கிறோம். எங்களுக்கு இல்லை என்று கூறி மழுப்பலாக பதில் சொல்கின்றனர். .இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . முதன்மைச் சாலையில் அமைந்திருப்பதால் நெடுந் தொலைவு பயணிக்கும் பயணிகள் இம்மாதிரியான கழிப்பறைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மொழி தெரியாத பல மக்கள் நிஜமாகவே இதற்கு அரசு கட்டணம் வசூலிக்கிறது என்று அவர்கள் கேட்கின்ற தொகையை கொடுத்துவிட்டு நகர்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்பது மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!