மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான தமிழ்நாடு மாநில இன்விடேஷனல் கராத்தே சாம்பியன் புடோ-ரியோகராத்தே
போட்டி விருதுநகரில் நடந்தது.இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினர். 14 வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கௌ.சம்யுக்தா முதல் பரிசு வென்றார். 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இராமநாதபுரம் புனித அந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி கலைச்செல்வி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவி சுவாதி ஸ்ரீ, 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இராமநாதபுரம் முகமது சதக்
தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி 9 ஆம் வகுப்பு மாணவர் அஹமது ஜலாலுதீன், 13 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ஹாஷினி, ஐந்தாம் வகுப்பு மாணவர் பிரஷாந்த் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்தனர். மாநிலப் போட்டியில் வென்று நவ.30, டிச.1 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தகுதி படைத்த மாணவ, மாணவியர், கட்டணமின்றி பயிற்சி அளித்த மாஸ்டர் எம்.சி.குகன் ஆகியோரை பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர் பாராட்டினர்.
தேசிய கராத்தே போட்டி ராமநாதபுரம் மாணாக்கர் தகுதி
எழுதியவர்: mohan November 18, 2019, 10:41 am




You must be logged in to post a comment.