18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை வைகையாற்றில் வெள்ளத்தில் இழுத்து செல்லப் பட்ட சிறுவன் பிணமாக மீட்பு

மதுரை வைகையாற்றில் வெள்ளத்தில் இழுத்து செல்லப் பட்ட சிறுவன் பிணமாக மீட்பு

எழுதியவர்: mohan November 18, 2019, 9:50 am

மதுரை பெத்தானியாபுரம் வைகை ஆற்றுப்பகுதியில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் குமார் மகன் பாலமுருகன் 11வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள ஆற்றில் இறங்கியுள்ளான்.சிறிது நேரத்தில் வைகையாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப் பட்டது.அதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.மதுரை திடீர் நகர் தீயணைப்புத் துறையினர் மற்றும் தல்லாக் குளம் தீயனைப்பு துறையினர் இரவு வரை தேடினர்.சிறுவன் கிடைக்காத நிலையில் இன்று காலை ஆரப்பாளையம் வைகையற்று பாலத்துக்கு அடியில் பிணமாக மீட்கப்பட்டான். உடலை பார்த்த உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.உடலை கைப்பற்றிய தீயணைப்பு துறையினர் ராஜாஜி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!